சின்னக் கண்ணன் பூதனைக்கு மோக்ஷத்தை அளித்தான்; ததிபாண்டனுக்கும் அவன் பானைக்கும் சேர்த்தே மோக்ஷம் அளித்தான்; அவனின் தலைவலி போக்கிய கோபிகை; அவனுக்குகாகக் காத்திருந்த குப்ஜை இவர்களை அவன் அருளால் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்; வஞ்சக நெஞ்சம் கொண்ட கம்சனையும், சீமாலிகனையும் வதம் செய்தான்; காதல் ருக்மணியை கைப்பிடித்து மனைவியாக்கி, ஏழை குசேலனை செல்வந்தனாக்கி, பார்த்தனுக்கு சாரத்தியம் செய்து, கர்ணனுக்காகக் கண்ணீர் விட்டு, இவ்வளவும் அந்த பரந்தாமன் கண்ணனால் மட்டுமே செய்யப்பட்ட செயல்களாகும்!
அவன் செயல்களைப் போற்றி, பக்திப் பூக்களால் தொடுக்கப்பட்டு மாலையாக்கி, கண்ணனின் சன்னதியில், பக்திப் பாவையர்கள் பத்து பேர்களின் கைகளாலேயே, கண்ணனுக்கு அணிவித்து மகிழ்ந்துள்ளார்கள் என்பது பரவசமே!
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.