புறா தபால்காரராக பணி செய்தது. அதன் காலில் ஓலைச்சுவடிகளை கட்டி தகவல் அனுப்பினர்.
இன்றைய காலகட்டத்தில் ‘இ மெயில், வாட்ஸ் அப்பில்’ தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகின் வரப்பிரசாதம். ஆனால், அந்த காலத்தில் ‘போஸ்ட் கார்ட்’ இன்லேன்ட் லெட்டரில் எழுதி அனுப்பும் போதும் சரி அதை படிக்கும் போதும் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. அவை உயிரூட்டம் உள்ள காவியம். சிகப்பு நிற தபால் பெட்டி இன்று காட்சி பொருளாகிவிட்டது.
‘நலம் நலமறிய ஆவல்’ என்ற இந்த புத்தகத்தின் எழுத்தாளர்கள் எண்மர் கடிதத்தின் வடிவமைப்பு, தன்மை மாறாமல் உறவினர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் வாழ்வில் பிண்ணி பிணைந்த உயிரற்ற பொருட்களுக்கும் கடிதம் எழுதி தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு அஞ்சல் பயன்பாட்டை கொண்டு செல்கின்றனர். ஒரு கடிதம் தபால் பெட்டிக்கே எழுதி உள்ளார் ஒரு எழுத்தாளர்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.