மூதுரைக்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப்பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது. இச்செய்யுள்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஒளவையார் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.
இந்தப் புத்தகத்தில் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் ஆறு எழுத்தாளர்கள் எளிய கதைகள் மூலமாக மூதுரையை விளக்கி உள்ளார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்துப் போற்றி பாதுகாக்க வேண்டிய புத்தகம்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.