பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான். இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
Kriminalgåtor och spänning