உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.