ஆண்டிராய்டு தொழில் நுட்பத்தில் ஒரு அற்புதமான விளையாட்டு
உங்களது பொழுதை அற்புதமாக அத்துடன் மகிழ்ச்சியாகவும் கழிக்க, இதோ ஒரு அற்புதமான விளையாட்டு. இதனை பரமபதம், வைகுண்டப்பள்ளி, மோக்ஷ பாதம் என்றெல்லாம் அழைப்பது உண்டு. இந்த விளையாட்டு புராண காலம் தொட்டு இன்று வரையில் தமிழகத்தின் பல பகுதிகளில் காலத்தை வென்று விளையாடப்பட்டு வருகிறது.அத்துடன் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறது.
வாழ்க்கையில் எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் வரும் அதனை சமாளித்து வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை வழியுறுத்தும் ஒரு அற்புதமான விளையாட்டு இது
.
பாம்பினால் கடிபடாமல் மேல் நோக்கிச் சென்று 100 என்னும் இலக்கை அடைய வேண்டும். அப்படி கடிபடும் போது கீழே பாதாளத்திற்கு தள்ளப்படுவோம். அதே நேரம் ஏணி இருக்கும் எண்ணுக்கு நாம் வீசும் பகடைக் காய்களின் எண்ணிக்கை இருந்தால் மிக எளிதில் மேல் நிலையை அடைந்து விடலாம்.
முதலில் 100 எனும் எண் கொண்ட இலக்கினை சென்று அடைபவரே வெற்றியாளர் ஆவார்.
இந்த விளையாட்டில் நாங்கள் கொடுத்து உள்ள சிறப்பு அம்சங்கள்.
1. இதில் உள்ள பலகையில் நான்கு வகையான வண்ணப் பின்னணியை (Backgrounds), ஒரே ஒரு கிளிக்கின் மூலம் உருவாகிக் கொள்ளலாம்.
2.ஒரே சமயத்தில் நான்கு பேர் இந்த விளையாட்டை விளையாடி மகிழலாம்.
3.அத்துடன் நீங்கள் ஆண்டிராய்டு (அதாவது கணிப்பொறி) உடனும் போட்டி போட்டு விளையாடி ஒரு கை பார்க்கலாம்.
4.இதில் உள்ள காய்கள் வண்ண மயமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
5.அது போல இதில் உருண்டு அழகாக சத்தமிடும் தாயமும் காண்போர்கள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப் பட்டு உள்ளது.
6. இதில் மல்டி பிளேயர் ஆப்சனும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இத்தனை அம்சங்கள் கொண்ட இந்த விளையாட்டை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய இன்னும் ஏன் தாமதிக்கின்றீர்கள். உடனே இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குங்கள். அத்துடன் உங்கள் பொன்னான கருத்தை அன்பு கூர்ந்து பதிவு செய்யுங்கள். அது எங்கள் சேவைத் திறத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் Android தொழில்நுட்பத்தில் எங்கள் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜூலை, 2021