“எத்தனை முறை மானம், மரியாதையை விட்டுட்டு பொண்டாட்டியை வா.. வா.. ன்னு கூப்பிடுவான். இப்ப இவ அங்கே வாழப் போறாளா.. அல்லது நாங்க எங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கவா?”
“செய்துதான் பாருங்களேன். இவளா ஒண்ணும் பொட்டியைத் தூக்கிட்டு வரலியே! உங்க வீட்டை மீட்க, எங்ககிட்ட பணம் பிடுங்கச் சொல்லி அனுப்புனது யாரு?”
பாகீரதிக்குச் சரியாக, யமுனாவின் குரலும் திமிராகவே வந்தது. ஆதர்ஷ் வீட்டார் அயர்ந்து பார்த்தனர்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 50 கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.