அந்தச் செய்தியை காலையில் நான் படித்த போது அது என்னை ஈர்க்கவில்லை. ஆனால் மாலையில் அதே செய்தித்தாளை நான் மறுபடியும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது அது என் கண்ணில் பட்டது. படித்துப் பார்த்தேன். அதற்குள் ஒரு கதை ஒளிந்து கொண்டிருப்பது மின்னல் வெட்டாய் மனசுக்குள் பளிச்சிட்டது. அதை எழுத ஆரம்பித்த போது ஒரு நாவல் கிடைத்தது.
அந்த நாவல்தான் 'உன்னை விட்டால் யாருமில்லை'. படித்துப் பாருங்கள்.
- ராஜேஷ்குமார்.