“அதேதான் நானும் கேட்கறேன். உனக்கு என்னாச்சு சவி புருஷனைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிச்சு இருக்கே?” குற்றப்பத்திரிக்கை வாசித்தாளா? அவளா? “இது இங்க மட்டும்தானா? இல்ல... உன் அம்மா வீட்டுலயும் மறுஒலிபரப்பு ஆகுதா?”
“நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல. நான் என்ன குற்றப்பத்திரிக்கை வாசிச்சேன்? தெளிவா எனக்குப் புரியற மாதிரி பேசுங்களேன்.”
“நிஜமாவே புரியலயா? புரியாத மாதிரி நடிக்கறியா?” கண்ணாடியை விட்டு விலகி வந்து அவளை உறுத்துப் பார்த்தான் ஷைலேந்திரன். என்னவென்றே புரியாத கேள்விக்கு அவள் என்னதான் பதில் சொல்வாள்?
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.