Sales Success (Tamil)

· Manjul Publishing
4.0
8 கருத்துகள்
மின்புத்தகம்
148
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

 ‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.

 

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘விற்பனையில் வெற்றி’ எனும் இந்நூலில், விற்பனைத் தொழிலில் நீங்கள் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை விற்பனை விற்பன்னரான பிரையன் டிரேசி விரிவாக விளக்கியிருக்கிறார்.

 

அவற்றில் பின்வருவனவும் அடங்கும்:

 

·         தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்துதல்

·         உங்களுடைய விற்பனைப் பொருளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருத்தல்

·         வாடிக்கையாளர்களாக ஆவதற்குச் சாத்தியமுள்ளவர்களுடன் துவக்கத்திலேயே நம்பிக்கையையும் ஒரு நல்ல உறவையும் வளர்த்தெடுத்தல்

·         ஆற்றல்மிக்க விளக்கவுரைகளை உருவாக்குதல்

·         ஆறு முக்கிய ஆட்சேபனைகளைச் சமாளித்தல்

நடவடிக்கை எடுக்கும்படி வாடிக்கையாளர்களைத் தூண்டுதல்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
8 கருத்துகள்

ஆசிரியர் குறிப்பு

உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.  உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.