நம் பெண்கள் பலர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று நமக்கு விடுதலை வாங்கி தந்தனர். அதில் ஆம்பூர் கோவிந்தம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, குயிலி ஆகியோரைப் பற்றி சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் கதை மற்றும் நாடக வடிவில் கொடுத்துள்ளார்.
சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.
தமிழின் மீதும், தமிழ் புத்தகங்கள் மீதும் தீரா பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. சில வருடங்கள் பண்ருட்டியில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல் நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வி தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதை தொகுப்புகளில் எழுதுயுள்ளார்.