மஞ்சரியின் தங்கை செய்யும் கேவலமான காரியத்தால் சைதன்யாவின் தங்கை அதிதியின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு திசைமாறுகிறது.
இதனால் மஞ்சரியின் மொத்த குடும்பத்தின் மீதும் கோபத்தில் இருக்கிறான் சைதன்யா.
இறுதியில் மஞ்சரியின் தங்கை திருந்தினாளா? அதிதியின் வாழ்க்கை என்னவானது?
சில கதாபாத்திரங்களைக் காணும்போது இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று நினைக்கத் தோன்றும். ஆனால், துரதிருஷ்டவசமாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யஷ்வந்த் போன்ற ஆட்களை வெறுக்கவும் தோன்றும்.
தோட்டத்து மலர்கள் பல்வேறு வண்ணங்களில் உள்ளது போல் பலவகையான குணசித்திரங்களைப் பிரதிபலிக்கும் கதை.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.