பவித்ராவின் அண்ணன் அகிலேஷ், தன்னிடம் வேலை செய்த மிருணாளினி என்ற நங்கையோடு தவறான தொடர்பில் இருக்கிறான்.
இந்த விஷயம் வெளியே தெரிய வரும்போது, இரு குடும்பங்களில் ஏற்படும் காட்சிகள் என்ன என்பதைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை.
கடைசியில் அந்த மிருணாளினிக்கு என்ன ஆனது? அகிலேஷின் மனைவி தன் கணவனின் தவறுகளை மன்னித்தாளா?
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.