Paadathu Parantha Kili

· Pustaka Digital Media
Llibre electrònic
119
Pàgines
No es verifiquen les puntuacions ni les ressenyes Més informació

Sobre aquest llibre

1950-க்கு முன் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தர்மபுரியின் குக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி பேசும் கதை இது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்; பளிங்கு நீராய் பாய்ந்தோடும் ஆறு; பசுமை நிறைந்த வயல்வெளிகள். இத்தனை அழகும் நிறைந்து, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கருகில் உள்ள மலைக்கிராமங்களில் ஒன்று ஆலாமரத்தூர். கிராமங்களில் பெண் குழந்தைகளை பத்து வயதுக்கு மேலே படிப்பதற்காக கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்கும் அனுப்ப மறுக்கும் பெற்றோர்; குடும்ப கௌரவம் கருதி வயது வித்தியாசம் பார்க்காமல் தன் மகள் கனகத்தை சொந்த ரத்தபந்தத்திலேயே திருமண ஏற்பாடு செய்துவிடும் தந்தை; தான் நிறைய படிக்க வேண்டும் என்று மனம்நிறைந்த ஏக்கத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டு, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பருவ மங்கை கனகம். அவளது திருமண நாளில் காணாமல் போய்விடுகிறாள். அவளைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகப் படும்படியாகச் சம்பவக் கோர்வைகள் ஒரு துப்பறியும் கதையாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்போடு விரிந்துச் செல்கிறது. கதையினூடே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் சுற்றுப்புற அழகும், கிராமங்களின் பண்பாடு, விழாக்கள், உறவுகளைப் பேணிக் காக்கும் ஒற்றுமையுணர்வு, கிராமங்களின் எழிலும் பரவிக் கிடக்கிறது. முடிவு தெரியும்போது தந்தையுடன் நாமும் உறைந்துப் போகிறோம்.

Sobre l'autor

பெயர். : ஸரோஜா சகாதேவன். B.Sc ( புவியியல்)
கணவர்: P.V.சகாதேவன். ME, FIE (late)
பிறந்த ஊர்: சேலம்

தனது 53வது வயதிலிருந்து தினமணி, தினமலர், வணிக இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் கதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தினமலர் சிறுகதைப் போட்டியில் இரண்டு முறையும் தினமணியிலும் மற்றும் பல இதழ்களிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இவையன்றி கல்லூரி கருத்தரங்கு கோவை, மழலைச் சுவடுகளில் பாடல்கள், 'டி.வி.ஆர் பரிசு பெற்ற கதைகள் - தொகுப்பு' ஆகியவற்றில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை இந்நூலுடன் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவரது ' பாடாது பறந்த கிளி' சமூக நாவல் சிறந்த பெண்ணிய நாவலுக்காக இரண்டு பரிசுகளையும், ' முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும்' சிறுவர்களுக்கான வரலாற்று நாவல் உரத்த சிந்தனையின் N.R.K விருதும், 'இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும்' நூலுக்காக உரத்த சிந்தனையின் 'எழுத்துச் சுடர்' விருது, மற்றும் N.R.K விருதும், திருப்பூர் தமிழ் கலை, இலக்கிய அறக்கட்டளையின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் பெற்றுள்ளார்.

பொழுது காக்கும் பணி: இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வைத் திறனற்றவர்களின் கல்விப் பணியில் தன்னார்வலராக உதவி வருகிறார். வாசிப்பாளராக , ஆய்வு கட்டுரைகள் எழுதுவதில் உதவி, தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக கம்ப இராமாயணம் முழுதும் பள்ளத்தூர் பழனியப்பன் உரையுடன் ( 6000 பக்கங்கள்), TNPSC, UGC தேர்வுகளுக்கான புத்தகங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்து வழங்கல், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தல் என்று கல்விப் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்: சென்னை மாநிலக் கல்லூரியின் 'ஒலிப்பதிவுச் செம்மல்' விருது, உரத்த சிந்தனையின்'கண்ணொளிக் காவலர்' விருது, ஈரோடு Volunteers of humanity India வின் 'பாரதி கண்ட புதுமைப் பெண்' விருது ஆகியவை இவரது தன்னார்வத் தொண்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள்.

Puntua aquest llibre electrònic

Dona'ns la teva opinió.

Informació de lectura

Telèfons intel·ligents i tauletes
Instal·la l'aplicació Google Play Llibres per a Android i per a iPad i iPhone. Aquesta aplicació se sincronitza automàticament amb el compte i et permet llegir llibres en línia o sense connexió a qualsevol lloc.
Ordinadors portàtils i ordinadors de taula
Pots escoltar els audiollibres que has comprat a Google Play amb el navegador web de l'ordinador.
Lectors de llibres electrònics i altres dispositius
Per llegir en dispositius de tinta electrònica, com ara lectors de llibres electrònics Kobo, hauràs de baixar un fitxer i transferir-lo al dispositiu. Segueix les instruccions detallades del Centre d'ajuda per transferir els fitxers a lectors de llibres electrònics compatibles.