“நல்லா சொல்லுவியே! அங்கே போய் அந்தச் சபாபதி கிட்ட வெட்டுப்பட்டுச் சாகவா? தொழிலை மாத்திக்கறதா முடிவு பண்ணிட்டேன். மரியா மேடம் கிட்ட அது சம்மந்தமா பேசிட்டேன். பாக்கு, தேக்கு எல்லாம் இனி நம்ம பொறுப்பு. நீ உன் ஆளை அப்படிக்கா தள்ளிட்டுப் போய் லவ் பண்ணு...ம்மே!” என்றான் கூர்வாள்.
“இவனுக்கு ரொமான்ஸ் பண்ணவே வராது. வேஸ்ட் பார்ட்டி...” என்று சிரித்தாள் ஆத்மிகா.
“அப்புறம் எதுக்கு நான் கூப்பிட்டதும் இங்கே புறப்பட்டு வந்தே? உன் அப்பன் காட்டுன அந்த கனடா மாப்பிள்ளையைக் கட்டிட்டு போக வேண்டியதுதானே! ரொமான்ஸ்ல அள்ளுவானா இருக்கும்.” கோபமானான் ஆதித்யா.
“போயிருக்கலாம். ஆனா... எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கே...” கலகலவென்று சிரித்துக்கொண்டே ஓடினாள் ஆத்மிகா. துரத்திக்கொண்டு ஓடினான் ஆதித்யா.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.