Nandhalala

· Pustaka Digital Media
4.6
리뷰 11개
eBook
112
페이지
검증되지 않은 평점과 리뷰입니다.  자세히 알아보기

eBook 정보

கிருஷ்ணமூர்த்தி - ஜானு இவர்கள் இருவருக்கும் காதல் திருமணம் நடந்து, பிறக்கும் குழந்தையே நந்தலாலா. குழந்தை வளர வளர ஜானுவின் உலகங்கள் நொறுங்கின. பிரசவத்தின்போது ஆஃபீஸ் வேலை விட்டாயிற்று. சொந்தக்காலில் நிற்கிறோம் என்கிற ஈகோ நொறுங்கிற்று. அத்தனைக்கும் காரணம் ஒரு சின்னப்பையன். அவள் பெற்ற சொந்தப்பையன் நந்தலாலா! திடீரென ஜானு தன் கணவனையும், குழந்தையையும் பிரிந்து செல்கிறாள். கிருஷ்ணமூர்த்தி நந்தலாலாவை இறுதிவரை வளர்ப்பாரா? நீதிபதியின் தீர்ப்பு என்ன? வாசிப்போம் நாமும் எதுவும் அறியாத நந்தலாலாவுடன்...

평점 및 리뷰

4.6
리뷰 11개

저자 정보

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாதசுந்தரம் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள்/ விமர்சகர்களாலும், பிரபஞ்சன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம் போன்ற சமகால எழுத்தாளர்களாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற அடுத்த தலைமுறையினராலும் ஒரு சேரப் பாராட்டப்படும் மாலன் (நாராயணன்) இலக்கிய உலகிலும் இதழியல் உலகிலும் நன்கறியப்பட்டவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பட்டப்படிப்பும், அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

20 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில பரிசுகள் வென்றிருக்கின்றன. சமகால இலக்கியம் குறித்த வகுப்பறைகளில் இவரது படைப்புக்கள் விவாதிக்கப்படுகின்றன. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு 1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் என்ற பரிசளித்து பாராட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இவரது படைப்புலகம் பற்றிய ஒருநாள் கருத்தரங்கை நிகழ்த்தியது.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளிலும் பிரன்ச், சீனம், மலாய் ஆகிய உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதை ஒன்றை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா குறும்படமாகத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எமர்ஜென்சிக் காலத்தை விமர்சிக்கும் இவரது கவிதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள டஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி பதிப்பித்த ‘அவசரநிலைக்காலக் குரல்கள்'(Voices of Emergency- an anthology of protest poetry) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது வேறு சில கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில், சாகித்ய அகாதெமி இலக்கிய இதழான Indian Literature இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களின் எழுத்துக்களை ‘புலம் பெயர் இலக்கியம்’ என 1994ஆம் ஆண்டே வகைப்படுத்தி தினமணிக் கதிரில் அதற்கென சிறப்பிதழ் வெளியிட்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அதனைத் தொடர்ந்து அதனைக் குறித்துப் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புரை ஆற்றியவர். 2011ல் சிங்கப்பூரிலும் 2014ல் கோயம்புத்தூரிலும் இந்தப் பொருள் குறித்த சர்வதேச மாநாடுகளை நட்த்துவதில் முக்கியப் பங்களித்தவர். 2015 ஆம ஆண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளார்களின் படைப்புக்களைத் தேர்ந்து தொகுத்து சாகித்ய அகாதெமி மூலம் நூலாக வெளியிட்டவர் சிங்கப்பூர் அரசு அளிக்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, தங்க முனைப் பேனா விருது, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளிக்கும் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் விருது போன்ற சர்வதேச விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராகப் பணியாற்றியவர்.

சிங்கப்பூரின் எழுத்தாளர் வாரம், மலேசியாவில் நடை பெற்ற இந்திய விழா, சாகித்ய அகாதெமியின் எழுத்துக்களின் திருவிழா போன்ற பல சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டவர். இலக்கியத்தை வளர்த்தெடுக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சாகித்ய அகாதெமி அமைப்பில் தமிழ் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கிறார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழக ஆளுநரால் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.

தமிழகத்தின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே, தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சன் செய்திக் குழுமத்தின் செய்திப் பிரிவுத் தலைவராக இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை வழிநடத்தியதன் காரணாமாக தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அண்மைக்காலம் வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநராக கடமை ஆற்றியவர்.

யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழான திசைகள் மின்னிதழை நிறுவியவர். இப்போது அது மின்பதிப்பு, மின் சொல், மின் செய்தி மின் ஆவணங்கள் ஆகியவை கொண்ட ஓர் மின் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.

이 eBook 평가

의견을 알려주세요.

읽기 정보

스마트폰 및 태블릿
AndroidiPad/iPhoneGoogle Play 북 앱을 설치하세요. 계정과 자동으로 동기화되어 어디서나 온라인 또는 오프라인으로 책을 읽을 수 있습니다.
노트북 및 컴퓨터
컴퓨터의 웹브라우저를 사용하여 Google Play에서 구매한 오디오북을 들을 수 있습니다.
eReader 및 기타 기기
Kobo eReader 등의 eBook 리더기에서 읽으려면 파일을 다운로드하여 기기로 전송해야 합니다. 지원되는 eBook 리더기로 파일을 전송하려면 고객센터에서 자세한 안내를 따르세요.