நாக குமாரன் சமண மதத்தைச் சேர்ந்தவன். அரசனான இவன் பல பெண்களைத் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பின்னர் துறவறம் மேற்கொண்ட காட்சியை ஐந்து சருக்கங்களாக பிரித்து 170 பாடல்களில் பாடப்பட்டுள்ளது.
இந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்த நூலில் அருக தேவனுடைய சிறப்பு இயல்புகளையும் நாக பஞ்சமி நோன்பு என்ற தகவல்களையும் அறியலாம். நாக குமார காவியம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் காணப் படாமலேயே இருந்திருக்கின்றது.
இதனைக் கண்டெடுத்து பதிப்பித்து வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர். நாக குமார காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனைகளும், சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த நூலைத் தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.