Leadership (Tamil)

Manjul Publishing
4.8
8 రివ్యూలు
ఈ-బుక్
84
పేజీలు
రేటింగ్‌లు, రివ్యూలు వెరిఫై చేయబడలేదు  మరింత తెలుసుకోండి

ఈ ఇ-పుస్తకం గురించి

 ‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.

 

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘தலைமைத்துவம்’ எனும் இந்நூலில், வெற்றி’ நிபுணரான பிரையன் டிரேசி, நீங்கள் ஒரு சிறந்த தலைவராக ஆவதற்கு நீங்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்களையும் அவற்றை எவ்வாறு நீங்கள் செயல்படுத்துவது என்பதையும்  விளக்கியிருக்கிறார்.

 

இந்நூலில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 21 உத்திகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

 

·         மற்றவர்களிடம் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி

·         தாங்கள் ஒரு குறிக்கோளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உங்கள் ஊழியர்களிடம் ஏற்படுத்துவது எப்படி

·         பாதகமான சூழ்நிலைகளை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுவது எப்படி

·         வெற்றி பெறும் குழுக்களை உருவாக்குவது எப்படி

·         சாதாரணமான மக்களிடமிருந்து அசாதாரணமான விளைவுகளைப் பெறுவது எப்படி

·         நிறுவனத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய ஒருவராக எல்லோரும் உங்களைப் பார்க்கும்படியான ஒரு நபராக ஆவது எப்படி

రేటింగ్‌లు మరియు రివ్యూలు

4.8
8 రివ్యూలు

రచయిత పరిచయం

 உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.  உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.