பெண்களை தாயாக மதிப்பவனுக்கு, வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை சிந்திக்கவே முடியாத நிலை. தாயால் புகட்டப்பட்ட மதிப்பென்னும் பெட்டகத்துக்கு வெளியே, ஒரு பெண்ணை காதலாக அணுக முடியாத முரட்டு பூ மனிதன்.
தாயின் அன்றாட செத்துப் பிழைக்கும் வாழ்க்கையை கண்டு வளரும் நாயகி இனியா. கூடவே அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாக வளர்ந்து நிற்கும் அண்ணன் இன்முகன். இவர்களையே கண்டு வாழும் இனியா, ஆண்கள் என்றாலே பெரும் வெறுப்பைக் கொண்டு வளரும் இனியா, ஈஸ்வரை சந்தித்தால்?
ஆண்களை வெறுக்கும் இனியாவும், பெண்களைப் போற்றும் ஈஸ்வரும் தங்கள் இணையை எப்படி உணர்ந்து தெளிவார்கள்? விடை அறிய பயணப்படுங்கள் “என் நேச அசுரா”வுக்குள்.