பொய்கள் தித்திக்குமா? இங்கே கதையில் சொல்லப்படும் பொய்கள், நாயகன் நாயகியிடம் சொல்லும் பொய்கள் அனைத்தும் தித்திப்பாய் மாறினால்?
பிசிக்கலி சேலஞ்ட் நாயகியை, அந்த குறையை ஒரு நொடி கூட உணர வைக்காத, அதை முழுதாக மறக்க வைக்கக் கூடிய துணைவன் கிடைத்தால்? அவனை அவள் விட்டுக் கொடுப்பாளா?
அவனுக்கென எதையும் அவள் செய்யக் காத்திருக்க, அவளிடம் கொண்ட நேசத்தைக் கூட சொல்லாமல் விலகிச் செல்லும் நாயகன்... இருவருமே ஒருவரை ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றிக் கொள்ள முயல, உண்மைகள் அவர்களை பிரிய விடுமா என்ன?