எண் கட்டைப் புதிரானது மூளை வளர்ச்சிக்கு சிறந்த விளையாட்டாகும். சதுரச் சட்டகத்தினுள் சதுர எண் கட்டைகளில், ஒரு கட்டை வெற்றிடத்துடன் ஒழுங்கற்ற வரிசையில் தரப்படும். வெற்றிடத்தைப் பயன்படுத்தி எண் கட்டைகளைத் தள்ளி நகர்த்தி எண் கட்டைகளை ஒழுங்கு வரிசைப் படுத்துவதன் மூலம் இலக்கம் தள்ளும் எண் கட்டைப் புதிர் விளையாட்டினை வெற்றி கொள்ளலாம். உங்கள் தர்க்கத் திறனைக் கொண்டு மூளைக்கு வேலை கொடுத்து விளையாட்டை மகிழ்ச்சியாக ஆடுங்கள்.
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
எண் கட்டைப் புதிர் அம்சங்கள்:
8 வித்தியாசமான சவால் மாதிரிகள்.
3x3, 4x4, 5x5, 6x6, 7x7, 8x8, 9x9, 10x10 ஆகிய மாதிரிகள்.
பல்லாயிரக் கணக்கான சவால் நிலைப் பாங்குகள்.
ஒவ்வொரு சவால் மாதிரிகளிலும் வித்தியாசமான பல வடிவிலான சவால் நிலைப் பாங்குகள்.
கடினம் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் நாளாந்த சவால்கள்.
ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களில் 3 நிலைகளை விளையாடி எதிர் கொள்வதற்கு தனித்துவமான சவால்கள்.
டேட்டா இல்லாமல், ஓப்லயினில் விளையாடலாம்.
டேட்டா இல்லாமல் எப்பொழுதும், எங்கிருந்தும் விளையாடலாம். பயணத்தின் போதும், வாகனத்திற்குக் காத்திருக்கும் போதும் எந்நேரத்திலும் விளையாடலாம்.
விளையாட எளிதான காட்சியமைப்பு.
கண்ணுக்குத் தெளிவானதும் கடினமற்றதுமான சிறந்த நிறங்களில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இயற்கைப் பலகைக் கட்டைகளுக்கு ஒப்பான தரமான கட்டமைப்புகள்.
விளையாட்டு மதிப்பெண்கள் தானாகவே பதியப்படும்.
விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அணைந்தாலோ அல்லது திடீரென விளையாட்டிலிருந்து வெளியேறினாலோ விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கப் படாது விளையாடிய நிலையிலிருந்தே தொடரக் கூடியதாக இருக்கும். மேலும், விளையாட்டு மதிப்பெண்கள் தானாகவே பதியப் படும்.
எண் விளையாட்டு - உங்கள் சிந்தனை மற்றும் தர்க்கத் திறன்களை இலகுவில் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
எண் கட்டைகளை ஒழுங்கு படுத்துவதற்கு உங்கள் கைகள், மூளை மற்றும் கண்களை ஒருங்கிணைத்துத் தர்க்கங்களை மேம்படுத்தி, சிந்தனைத் திறன்களை விருத்தியாக்கிக் கொள்ளுங்கள்.
மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு - பிள்ளைகள் மற்றும் பெரியோருக்கு அறிவுசார் சிறந்த பொழுதுபோக்கு.
பொழுதுபோக்கு நேரத்தை வீணாகக் கழிக்காமல் அறிவை விருத்தியாக்கிக் கொள்வதற்கான சிறந்த இலக்கப் புதிர் விளையாட்டு.
விளையாட்டு வழிகாட்டல்களுடனான கட்டை எண் விளையாட்டு
விளையாட்டின் போது மிகக் கடினமாக உணர்கிறீர்களா? விளையாட்டு வழிகாட்டல்களில் ஒரு கட்டை நகர்த்துவதற்க்கோ, ஒரு வரிசையை நகர்த்துவதற்க்கோ அல்லது இரு வரிசைகளை நகர்த்துவதற்க்கோ சிறந்த செயல் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
நேரம் கணிப்பான்
நீங்கள் குறிப்பிட்ட சவால் மாதிரியை விளையாட எடுத்த நேரம் கணிக்கப் படுவதுடன், அந்த மாதிரியினாலான சவால் பாங்குகளிள் மிகக் குறைவான நேரத்தில் விளையாடிய பங்கின் நேரம் எப்பொழுதும் காட்டப்படும். நேர முகாமைத்துவம் மற்றும் விரைவில் மூளையைச் செயற்படுத்தவும் பயிற்றுவிக்கும்.
புது மாதிரிகளை இலகுவில் திறக்கலாம்
7x7, 8x8, 9x9, 10x10 ஆகிய மாதிரிகளை விளம்பரக் காணொளியைக் கண்டு கழிப்பதன் மூலம் இலகுவில் திறக்கலாம்.
எண் கட்டைப் புதிர் விளையாட்டானது பொழுதுபோக்கினை பயனுள்ளதாகவும், அறிவு மற்றும் தர்க்கத் திறனை விருத்தியாக்கிக் கொள்ளக் கூடியதுமான தரமான ஓப்லயின் விளையாட்டாகும். எண் கட்டைகளை சிறந்த முறையில் மித விரைவில் தள்ளி நகர்த்துவதன் மூலம் மிகக் குறுகிய நேரத்தில் எண் புதிரை ஒழுங்கு படுத்தி புதிய உச்ச எல்லையைப் பதிவு செய்யலாம். எண் கட்டைப் புதிரைப் பதிவிறக்கம் செய்து விளையாட்டின் சிறந்த அம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
14 ஜூலை, 2024